Bajrangi Bhaijaan(2015)

Directed by: Kabir Khan
Produced by: Salman Khan; Rockline Venkatesh
Screenplay by: K. V. Vijayendra Prasad; Kabir Khan; Parveez Shaikh
Story by: K. V. Vijayendra Prasad
Starring: Salman Khan; Harshaali Malhotra; Nawazuddin Siddiqui; Kareena Kapoor
Music by Songs: Pritam
Background score: Julius Packiam
Cinematography: Aseem Mishra
Edited by: Rameshwar S. Bhagat
Running time: 159 minutes
Language: Hindi

Seeran Review: I knew the entire story. A girl gets lost in India and a guy from India takes her back against all odds. How she comes to India and the climax are the two things to have a difference.

Though we act as opponents during the cricket matches and during newspaper headlines, we are just humans both sides of the fence sharing humanity and culture we have developed for 5000 years. The day is not far when we will be together again.

The following is an abstract from one of the stories of Writer Jeyamohan – ‘Ulagam Yavayum’ in which he describes about world citizenship and the pioneer to bring the world together – Garry Davis.

அவர் சற்று கனத்த மூக்குக்கண்ணாடிச்சில்லு வழியாக நட்புடன் என்னை நோக்கி பதிலுக்கு ‘’நீ எந்த நாட்டவன்?’ என்றார். நான் கொஞ்சம் குழம்பி ‘இந்தியன்’ என்றேன். ‘ஓ…’என்றார். ‘நீ இந்தியன் என யார் சொன்னது?’ நான் கொஞ்சம் யோசித்து கவனமாக ‘சட்டப்படி நான் இந்தியன்’ என்றேன். ‘அதாவது, இந்தியா என்று சொல்லப்படுகிற ஒரு நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஒர் அரசு உனக்கு ஒரு அடையாளத்தை அளிக்கிறது. இந்தியாவின் குடிமகன் என்று அது உன்னைச் சொல்கிறது, இல்லையா?’ நான் வில்லங்கமான ஒருவரிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்தேன்.

சரி, மேலே பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் வந்தது. ‘எனக்கு இந்த நாடு அடையாளத்தை மட்டும் தரவில்லை. எனக்கு இது பாதுகாப்பை அளிக்கிறது…’ என்றேன். ‘எவரிடமிருந்து?’ என்றார். ’பிற நாட்டினரிடமிருந்து’ ‘பிறநாட்டினர் என்றால்? அங்குள்ள அரசாங்கத்தால் உன்னைப்போல அடையாளம் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களிடமிருந்தா? அவர்கள் உன் எதிரிகளா? உன்னை அழிக்க நினைக்கிறார்களா?’ என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ‘உன் நாட்டு அரசின் மீது படைஎடுப்பது பிற நாட்டு அரசு. அது அரசுகள் நடுவே உள்ள போராட்டம். உன்னை வைத்து அந்த போரை நிகழ்த்துபவர்களை நீ உனக்கு பாதுகாப்பு தருபவர்கள் என்று நினைக்கிறாய்…’

சட்டென்று எனக்கு அது புரிந்தது. பெரும்பாலான ரவுடிகள் ஒரு ஏரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பக்கத்து பேட்டை ரவுடியிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்லித்தான். ஆனால் நான் அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் ‘நாடு என்று இருந்தால்தான் மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்’ என்றேன். ‘எந்த மக்கள்? பாகிஸ்தானியர்களும் இந்தியர்களுமா?’ நான் கோபமாக ’ இல்லை, இந்தியர்கள்’ என்றேன். ‘அப்படியானால் ஏன் ஊட்டி இந்தியாவுடன் இருக்க வேண்டும்? இந்த மலைப்பகுதியை தனி நாடாகச் சொல்லிவிடலாமே இந்த மலையில் உள்ள அனைவரும் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருப்பார்களே? ஏன் மசினகுடியைக்கூட தனி நாடாக ஆக்கலாமே’

நான் அவர் செல்லும் திசையை புரிந்துகொண்டு அமைதி காத்தேன். ‘ஊட்டி தமிழ்நாட்டுடன் இணைந்து ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால், தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்க முடியும் என்றால், ஏன் உலகம் ஒன்றாக இருக்க முடியாது?’ என்றார். அந்த கேள்வியிலிருந்த ஏதோ ஒன்றால் நான் நான் புன்னகை செய்தேன். ஊட்டியின் அந்த மலைச்சாலையில் ரிஷிகளைப்போல சிந்திக்கத்தோன்றும்போலும்.

Further Reading: http://www.jeyamohan.in/13318#.V8u3tjYVjIU

https://en.wikipedia.org/wiki/Garry_Davis

https://en.wikipedia.org/wiki/World_Passport

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s