Gangs of Wasseypur – Part 2 (2012)

Directed by: Anurag Kashyap
Produced by: Atul Shukla; Anurag Kashyap; Sunil Bohra
Written by: Zeishan Quadri; Akhilesh; Sachin Ladia; Anurag Kashyap
Starring: Nawazuddin Siddiqui; Huma Qureshi; Richa Chadda; Tigmanshu Dhulia; Pankaj Tripathi; Jameel Khan; Zeishan Quadri; Rajkummar Rao; Reemma Sen; Aditya Kumar
Music by:
Sneha Khanwalkar (soundtrack)
G. V. Prakash Kumar (score)
Cinematography: Rajeev Ravi
Language: Hindi
Running time: 159 minutes
Genre: Crime – Thriller

Seeran Review: மீதம் இருக்கும் அனைவரும் சுட்டுக்கொண்டு சாகின்றனர். அப்பன் சாகிறான், பெரியண்ணன் சாகிறான். அடுத்து தம்பி, தங்க கம்பி ரவுடி ஆகா வேண்டிய நிலை. அவனும் ஆகிறான். ‘Godfather’ கதைபோலவே இருக்கின்றது என்றெல்லாம் சொல்லக்கூடாது.

‘Faizal when will your blood boil, son? Your father paid for your drugs with his life. Now your brother has paid the price for your recklessness. So when will you pull the trigger, boy? When will you leave those potheads and avenge your father and brother?’

படத்தில் பிடித்த காட்சிகளில் ஒன்று காதலை சொல்லும் காட்சி – ‘See, I smoke pot, hash I’ve even murdered Fazlu and a few others. Done some jail time too. So you want to tell me about your stuff?’ மற்றொன்று சாட்டை அடி.

முதலிலேயே ஒரு முறை இந்த படத்தை பார்த்தேன். விமர்சனம் எழுதுவதற்காக மறுபடியும் பார்த்தேன். முதல் 20 நிமிடங்கள்தான் தொடர்ந்து காட்சியைகள் எதையும் ஓட்டாமல் பார்க்கமுடிந்தது, போக போக சலித்துவிட்டது. எவன் எப்படி என்று தெரிந்துவிட்டது. இது வெறும் thriller கதைதான் என்பதால் மறைத்தாழுதல் ஆக முக்கியம். அணைத்து கதாபாத்திரங்களின் குணாதசியங்களும் தெரிந்துவிட்டது. இந்த படத்தின் முதல் பாகத்தில் தெரியவில்லை என்பதை கவனிக்கவேண்டும். மொத்தத்தில் Faizal Khan (Nawazuddin Siddiqui) கதாபாத்திரத்திற்காகவே படம் ரகலை. மற்றபடி ஒரு வெங்காயமுமில்லை என்ற அளவுக்கு சலிப்பு. மீதமுள்ள மொத்தப்படத்தையும் 30 நிமிடங்களில் பார்த்துவிட்டான்.

என்னுடைய முழு கவனமும், எப்படி படம் இருக்கின்றது என்பதைத்தாண்டி என்ன சொல்கின்றது, அது நம்மை என்னவாக ஆக்குகின்றது, நம்முள் நிகழும் அதன் மாற்றம் எவ்வளவு நாட்களுக்கு. உடனே ஒரு கேள்வி எழலாம். அப்படியெனில் M.G.R படங்களை பார்த்து வாழ்வில் மாற்றங்களை அமைத்து கொண்டவர்களின் எண்ணிக்கை Werner Herzog படங்களைக்காட்டிலும் அதிகம்தானே. அப்படியெனில் … இல்லை என்னுடைய கருத்து அதுவல்ல. இப்படி சொல்லலாம் M.G.R படங்களை பார்த்து வாழ்க்கையை மாற்றிக்கொண்டவர்களில் எத்தனை பேர் M.G.R ரசிகனாய் இருக்கின்றனர் என்று பார்த்தல். பலர் M.G.R படங்களை தவிர எதையும் பார்க்கவோ கேட்கவோ மாட்டார்கள். அப்போ மற்றவர்கள். ஆக M.G.R படம் வெறும் இசை கேட்கும்போது நிகழும் ஒரு தருணம் போல. வாசகன் எழுதாத எழுத்தாளனாக இருத்தல் வேண்டும். அவனாலே குதிரை ஓட்டப்பந்தயத்தில் ஜெயிப்பதற்கு, Usain Bolt வென்றதற்கும் இருக்கும் வித்யாசம் புரியும். எனது இந்த இயல்பின் பொருட்டாகவே படம் சிறிதுநாட்களில் மறந்துவிடும், ஆனால் காட்சிகள் நினைவிலிருக்கும். காட்சிகள் ஆழமான மாற்றத்தை நிகழ்த்த வல்லது.

இதுவே முட்டாக அமையலாம். பல காட்சிகள் பாதித்தது, ஆனால் முழுவதையும் பார்க்கும்பொருட்டு, அனைத்தையும் சேர்க்கும் அந்த ‘அறம்’ எனும் மணல் கயிறு missing. ‘அறம்’ கூடஇல்லை கயிறையே காணவில்லை. அதுவே ஒரு கயிறுதானே என்றால் – ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று சொல்லி போங்கடா போய் வேலைய பாருங்கடா என்று போகறத விட்டுவிட்டு படம் எடுக்கிறாங்களா படம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s