V for Vendetta (2005)

Directed by: James McTeigue
Produced by: Joel Silver; Grant Hill; Andy Wachowski; Larry Wachowski
Screenplay by: The Wachowski Brothers
Based on V for Vendetta 1988 DC Comics by David Lloyd; Alan Moore (uncredited)
Starring: Natalie Portman; Hugo Weaving; Stephen Rea; John Hurt
Music by: Dario Marianelli
Cinematography: Adrian Biddle
Edited by: Martin Walsh
Language: English
Running time: 132 minutes
Genre: Dystopian Political Thriller

Seeran Review: இப்போது தேதி 23-3-2017. இந்த படத்தை முதலில் பார்த்தது 2015 இல் . இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்காக இப்போது இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட கதாநாயகனின் முகமூடியையும் அந்த பெண்ணையும் தவிர மொத்த படத்தின் கதையையும் முற்றாக  மறந்துவிட்டேன். ஆனாலும் ஒரு வசனம் மட்டும் இதுநாள் வரை நினைவில் ஒட்டிக்கொண்டது. அந்த வசனம் இதுதான் – Artists used lies to tell the truth. எவ்வளவு ஆழமான சொற்றொடர். சிறிதேனும் புனைவை எழுத முயன்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும், எழுதும் போது அணைத்து எழுத்தாளனுக்கும் உண்மையின் ஒரு சனம் மட்டும்தான் தெரியும். எழுத எழுத அது அவனுக்கே தெரியாமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

WOMAN: Remember, remember The 5th of November. The gunpowder treason and plot I know of no reason. Why the gunpowder treason Should ever be forgot But what of the man? I know his name was Guy Fawkes and I know in 1605, he attempted to blow up the Houses of Parliament. But who was he really? What was he like?  [DOGS BARKING] WOMAN: We are told to remember the idea and not the man. Because a man can fail. He can be caught, he can be killed and forgotten. But 400 years later an idea can still change the world. I have witnessed firsthand the power of ideas. I’ve seen people kill in the name of them [CROWD YELLING] and die defending them. But you cannot kiss an idea cannot touch it or hold it. Ideas do not bleed. They do not feel pain. They do not love. And it is not an idea that I miss. It is a man. A man that made me remember the 5th of November. A man that I will never forget.

People should not be afraid of their governments. Governments should be afraid of their people. And you’ll make that happen by blowing up a building? The building is a symbol, as is the act of destroying it. Symbols are given power by people. Alone, a symbol is meaningless, but with enough people blowing up a building can change the world.

What is that? It’s a copy of the Koran, 14th century. Are you a Muslim? No, I’m in television. But why would you keep it? I don’t have to be Muslim to find the images beautiful, poetry moving.

There are no coincidences, Delia. Only the illusion of coincidence.      

I remember how “different” became dangerous. I still don’t understand it why they hate us so much. – ஓரின சேர்க்கையாளர்களை பொது இடங்களில் பார்த்தால் ஒன்றும் ஒவ்வாமையில்லை ஆனால் படுக்கையில் கலவி செய்கையில்தான் அசிங்கமாக இருக்கின்றது. படுக்கை அறைக்குள் அவர்கள் என்ன செய்தால் நமக்கென்ன? DANTES: It is not my sword, Mondego, but your past that disarmed you.

இந்த படத்தின் கருத்தியலில் எனக்கு ஒரு ஏற்புமில்லை. முகமூடிமனிதனால் அவ்வாறு பறந்து பறந்து சண்டையிட முடியவில்லையெனில் ஒரு வெங்காயமும் நகர்ந்திருக்காது. Jeyamohan கட்டுரையில் இருந்து சுட்டது – ஹிட்லரின் வலிமை அவர் ஆயுதங்களில் இருக்கவில்லை. அவர் தன் சமூகத்தின் அங்கீகாரத்தை வென்றதில் இருக்கிறது. அந்தச் சமூகம் அவருடன் உறுதியாக நின்றது. ஹிட்லரை ஆதரித்த ஜெர்மனிய மக்கள் அனைவருமே பாவத்தில் ஊறிய குரூரமான மிருகங்கள் அல்ல. அவர் செய்தவையும் செய்யபோனவையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. போருக்குப்பின் தெரிந்த போது அவர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள். தேசியவெறியால் இனவெறியால் இட்டுச்செல்லப்பட்டார்கள் அவர்கள்.

அம்மக்களில் இருந்து உருவான ஒரு மாபெரும் சத்யாக்ரகப்போராட்டம் அம்மக்களின் மனசாட்சியுடன் பேசியிருக்க முடியும். அவர்களுக்கு உண்மையைச் சொல்லியிருக்க முடியும். போருக்குப்பின் அவர்களில் எழுந்த மனசாட்சியை போருக்கு முன்னரே கண்விழிக்கச் செய்திருக்கமுடியும். அதைச்செய்யும் வாய்ப்பிருந்தவர்கள் அங்கிருந்த இடதுசாரிகள். ஆனால் அவர்கள் வன்முறைப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதற்கான உதவிகளுக்காக சோவியத் ருஷ்யாவை நம்பியிருந்தார்கள். தேசியவெறி இயக்கமான நாசி இயக்கம் மிக எளிதாக இதைப்பயன்படுத்தியே அவர்களை ஓரம் கட்டியது.

ஹிட்லரை ஆதரித்த மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் அந்த அரசு மீது போர்தொடுத்தது ஐரோப்பிய உலகம். தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதனால் அம்மக்கள் அவ்வரசுக்கு உறுதியான ஆதரவளித்து கூடவே நின்றார்கள். உலகப்போர் அத்தனை நீண்டமைக்கும் பேரழிவுகள் இரு தரப்பிலும் உருவானமைக்கும் காரணம் அதுவே. இன்று ஹிட்லர் தோற்றமையால் அவ்வழி சரியே என்று பேசுகிறோம். வென்றிருந்தாரென்றால்? அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன என்பதை உலகப்போரை கூர்ந்து வாசித்த எவரும் அறிவார்கள். வென்றிருந்தாரென்றால் உலகமும் ஜெர்மனியும் மேலும் பேரழிவுக்குச் சென்றிருக்கும்.

ஹிட்லரிடம் அல்லது அதேபோன்ற சர்வாதிகாரியிடம் ஒரு சத்யாக்ரகப்போராட்டம் என்ன செய்யும்? அவரது அதிகாரத்தை அளிக்கும் சிவில்சமூகத்தின் மனத்தை மாற்றி அவரை தனிமைப்படுத்தும். ஒருவேளை அதற்கு சற்று காலம் தேவைப்படலாம். ஆனால் வன்முறை உருவாக்கும் அழிவுகளுடன் ஒப்பிடும்போது அதன் இழப்புகள் குறைவு, வெற்றி அனேகமாக உறுதிப்பட்ட ஒன்று.

சத்யாக்ரகம் போன்ற ஒரு போர்முறையை நாம் கற்பனாவாதம் சார்ந்து மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அது அறவுணர்வுகொண்டவர்களின் மனசாட்சியுடன் பேசும் என்பது உண்மை. அதைவிட முக்கியமான உண்மை என்பது அது கோடிக்கணக்கான மக்களின் யதார்த்த உணர்வுடன் பேசும் என்பது. எளிய மக்கள் வாழ விரும்புகிறார்கள். போரிடுவதற்கும் சாவதற்கும் அல்ல. எப்படியாவது தங்கள் லௌகீக அவலத்தை வென்று சற்று மேலான ஒரு வாழ்க்கையை நோக்கி நகரவே ஆசைப்படுகிறார்கள்.

உதாரணமாக இன்று போர்வெறியர்களாகச் சித்தரிக்கப்படும் சிங்கள மக்களேகூட இரண்டு முறை போரை நிறுத்திவிட்டு சமாதானத்துக்கு செல்வோம் என்ற உறுதிமொழியுடன் தேர்தலில் நின்ற இரு தலைவர்களை -சந்திரிகா குமாரதுங்கவையும் ரனில் விக்ரமசிஙவையும்–  பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெறச்செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தமிழ் மக்களை ஒழிக்க அவர்கள் எண்ணுகிறார்கள் என நான் நினைக்கவில்லை. பட்டினியிலும் புறக்கணிப்பிலும்  வாழும் மக்கள் எங்குமே ஒன்றுதான். அவர்கள் தேடுவது எப்படியாவது வாழ்ந்து விடமுடியாதா என்ற நம்பிக்கையை மட்டுமே..

காந்தியம் என்பது கோட்பாடு கொள்கை ஆகிய அனைத்துக்கும் மேலாக எளிய மக்களை முன்வைத்து நடத்தப்படும் உரிமைப்போராட்டம். தன் கனவுகளுக்காக அம்மக்களைப் பலியிடுவதில் நியாயமில்லை என உணர்ந்த ஒரு ஞானியின் வழிமுறை அது. மக்களை கலைத்துவிட்டு தங்களுக்குரிய மக்களை தேர்வு செய்ய விரும்பும் மேட்டிமையாளர்கள் அதை எதிர்ப்பது என்பது தீமை நன்மைக்கு எதிராக கொள்ளும் வெறி மட்டுமே.

Further Readings: https://en.wikipedia.org/wiki/List_of_dystopian_films

https://en.wikipedia.org/wiki/V_for_Vendetta_(film)

http://www.jeyamohan.in/2768

https://en.wikipedia.org/wiki/Violet_Carson

https://en.wikipedia.org/wiki/Rosa_%27Violet_Carson%27

https://en.wikipedia.org/wiki/Old_Bailey

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s