The Silence (1998)

Directed by: Mohsen Makhmalbaf
Produced by: Marin Karmitz
Written by: Mohsen Makhmalbaf
Starring: Tahmineh Normatova
Cinematography: Ebrahim Ghafori
Edited by: Mohsen Makhmalbaf
Running time: 76 minutes
Genre: Drama
Language: Persian

Seeran Review: Iranian படம் என்றாலே அதன் அமைதிக்காகவே பிடித்துவிடுகிறது. சில படங்களில் போருக்கு முன்பு இருக்கும் அமைதி என்றால் இது போன்ற படங்கள் போருக்கு பின்பிருக்கும் அமைதியை சுட்டுகிறது.

Being a highly meta-physical work, it is to the comfort of the viewers to derive the film themselves. So here I will give my perspective of the film.

இந்த படத்தின் கதாநாயகர்கள் இருவர். ஒன்று அந்த சிறுவன் மற்றொன்று அவன் வளர்க்கும் தேனீ. தேனீ எப்படி தேனை மட்டும் தனது வாழ்நாள் முழுக்க அறிந்துவைத்திருக்குமோ, அதே போல இந்த படத்தில் வரும் Khorshid, எனும் கண்தெரியாத சிறுவன் இசையை மட்டும் தேடுகிறான், அறிந்துகொள்கிறான். அவன் உலகத்தில் காட்சிகள் இல்லை வெறும் இசை. இசையால் மட்டும் நிரம்பி வழியும் உலகம். எங்கே நல்ல இசையை கேட்கிறானோ அவன் அதை தொடர ஆரம்பித்து விடுவான். இப்படி பின்தொடர்வதனாலே பல சமயங்களில் அவன் தான் செல்லவேண்டிய வழியை தவறவிட்டுவிடுவான். இளமை பருவத்தில் நமது உயிரின் அளவற்ற சக்தியால் நமது இலக்கை தவறவிடுவதை போலல்ல, ஒரு ஓநாய் நாயை போல அடங்கி வாழ முயன்று தோற்பதைப்போல நியாமுடையது.

படத்தில் ஒரு தருணத்தில் இவனும் ஒரு வெண்ணிற குதிரையும் இசைக்கு நதியின் நடுவே நடனமிடுவதை போன்ற ஒரு காட்சி வரும். இந்த காட்சியில் இவன் குதிரையை போல ஓடுகிறான் என்று பட்டாலும், இவனுக்கு பார்வை கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். நடராஜப்பெருமான் ஆடும் நடனம்தான் உலகத்தில் நிலைபெற்றுள்ள அணைத்து இயங்கத்திற்கும் நடுவிலுள்ள தொடர்பு என்று ஒரு தத்துவம் சைவத்தில் உண்டு (எங்கயோ கேட்டதுபோல இருக்கின்றது). இவர்கள் இருவரும் ஆடும் நடனம் எப்படியோ அந்த நடனத்தை நினைவுபடுத்தியது. ‘The pilgrim and the dwelling are both me, the trap and the bait are also me, the Wiseman and the fool are both me, the master is me, the enchained man is also me, the master of destiny is me, don’t go astray, don’t go astray’.

மற்றொரு கவனிக்கவேண்டியது, வீட்டின் முதலாளி எத்தனை முறை வாடகை கேட்டு வந்தாலும் அது ஒரு கிண்டலாகவே காட்டப்பட்டுள்ளது. வாடகை கட்டுவதற்கு இவன் சுற்றி சுற்றி அழைந்தாலும் அதில் அவனது உயிர் முற்றிலும் ஈடுபடுவதேஇல்லை என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றனர்.

அண்மையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். சாதாரண power check-up தான். கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சென்று பரிசோதித்தபோது வலது கண்ணில் 0.5 cylindrical power அதிகரித்துள்ளது அதனால் cornea test எடுக்க வேண்டும், 1500 ரூபாய் செலவாகும் என்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த test எடுக்கப்பட்டு ஒன்றும் இல்லை என்றனர். ஒரு second opinion செய்துகொள்வதற்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்தோம். இங்கே எல்லாம் பார்த்து விட்டு glaucoma இருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கின்றது அதனால் glaucoma test செய்துவாருங்கள் என்று அனுப்பி வைத்தனர். Glaucoma ஒரு பரம்பரை நோய். சொல்ல வந்த விஷயம் இதுதான், எனக்கு எப்போதும் கண்ணில் இருக்கும் பாப்பா செரியாக விரியாது அதனால் கண்ணிற்கு விடப்படும் சொட்டுமருந்தையே குறைந்தது 3 முறையேனும் விடுவார்கள். அவ்வாறாக கண் மூடி இருக்கும் வேளையில் நான் காலையில் இருந்து பார்த்துவந்த அத்தனை காட்சிகளும் கண் முன்பாக வந்து வந்து செல்கின்றது. சத்தம் காட்சிக்கு உதவி, அதை முழுமையடைய செய்கின்றதே தவிர பார்வை உள்ளவர்களுக்கு ஒலி இரண்டாம்பட்சமே. Khorshid உடைய உலகம் முற்றிலும் ஒலியால் நிரம்பியது, அதில் பார்வையுடைய மூடர்களுக்கு இடமேயில்லை.

‘O, my God, while this bee is going home, may nothing happen to it. Don’t get it get lost’. ‘Your eyes distract you, if you close your eyes you learn better’             

‘If I got lost it was because of your music. I always blocked my ears. Your music was so pretty and I got lost.’

எப்படி விமர்சனம் எழுதுவது என்றுதான் தெரியவில்லை. படத்தில் கதையே இல்லாததுபோன்றும் தெரிகிறது, மொத்தமும் சொல்லப்பட்டுவிட்டது என்றும் தோன்றுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s