Chinatown (1974)

Directed by: Roman Polanski
Produced by: Robert Evans
Written by: Robert Towne
Starring: Jack Nicholson; Faye Dunaway; John Hillerman; Perry Lopez; Burt Young; John Huston
Music by: Jerry Goldsmith
Cinematography: John A. Alonzo
Edited by: Sam O’Steen
Genre: Neo-Noir Mystery
Running time: 131 minutes
Language: English

Seeran Review: அடிக்கடி மது அறிந்துபவருக்கே புழப்படும் ஒரு அளவு இருக்கின்றது. அதாவது முழு போதையும் ஆகாமல் தெளிவுமில்லாமல் நடுவில் மிதக்கும் ஒரு level. குடித்துவிட்டு, வாகனத்தில் வீடு திரும்புவதற்கு வசதியாக குடிப்பவரிடம் இதை காணலாம். இதே போன்ற நிலை ஆழ்ந்த தியானத்தை விட்டு கண்திறக்கும் வேளையிலும் நிகழும். இந்த படத்தில் அந்த level முடியும்வரை பின்பற்றபட்டிருக்கின்றது. Thriller சிரிது படத்தின் ஓட்டத்தை ஆட்கொள்ளும்போது, சுவாரசியம் குறைந்து கதாப்பாத்திரங்கள் இன்னும் செறிவாக தம்மை நிலைநிருதிக்கொள்ளும்.

உதாரணமாக Katherine யார் என்பதை J.J. Gittes தெரிந்துகொள்வது. இந்த காட்சி படம் கிட்டத்தட்ட 90% ஓடிவிட்ட பிறகு வரும். இந்த ரகசியம் உடைந்தபிறகு, ஏற்பட்ட அதிர்ச்சி குறைந்தபிறகு நமது மனதில் மீதம் யார் யார் பிழைத்திருக்க போகின்றார் என்ற கேள்விமட்டும்தான். இப்போது படத்தின் தொடக்கத்தில் வந்த கதாப்பாத்திரமான Curly நுழைக்கபடுகின்றான். Curly உடைய மனைவியை வைத்து ஒரு நகைச்சுவை இருந்த போதிலும் (நகைச்சுவையும் சுவாரசியத்தையும் கலந்தடிப்பது பாமரத்தனமானது. Jackie Chan படங்களே இதற்கு சாட்சி.) அதற்கு பிறகு கிட்டத்தட்ட் இருதிகாட்சிவரையில் இன்னும் அந்த உச்சகட்டதிற்கு செறிவூட்ட எந்த முயற்சியும் இல்லை வெறும் நகரல்தான். ‘Curly, do you know how long I’ve been in this business?’ என்று சொல்லிவிட்டு J.J. Gittes மெதுவாக நடந்து வீட்டிற்கு செல்கிறான். அத்தனையும்  வெறும் ஏற்பாடுகள்தான் என்பதை கவனியுங்கள். படம் முழுவதும் இதை கவனிக்கலாம். சுவாரசியம் அதிகரிக்கும் போதெல்லாம் ஒரு சமன் அமைக்கபடுகிறது.

காரமும் இனிப்பும் ஒன்றுடன் ஒன்று நடனமாடிக்கொள்ளும் படம். Get thrilled for sure. I was thrilled even after 40 years of its release. A Classique thriller.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s