Good Will Hunting (1997)

Directed by: Gus Van Sant
Produced by: Lawrence Bender
Written by: Matt Damon; Ben Affleck
Starring: Robin Williams; Matt Damon; Ben Affleck; Stellan Skarsgård; Minnie Driver
Music by: Danny Elfman
Cinematography: Jean-Yves Escoffier
Edited by: Pietro Scalia
Running time: 126 minutes
Language: English
Genre: Drama

Seeran Review: நான் ‘A must see movie’, என்று சில படங்களைத்தான் சொல்லுவேன். நாவல்களில் எவ்வாறு War and Peace, Zorba the Greek கட்டாயமாக அனைவரும் படிக்கவேண்டிய,படிக்கமுடியும்  புத்தகங்களோ அதைபோன்றுதான் படங்களிலும் சில படங்கள் அனைவரும் பார்க்கவேண்டியது, பார்க்கமுடிந்தது. அவ்வாறு பார்த்தே ஆகவேண்டிய படங்களில் வரிசை சிலவற்றில் (Life of Pi (2012), Spring, Summer, Fall, Winter and Spring (2003), The Virgin Spring (1960)) இதுவும் ஒன்று.

இந்த படத்தை பார்த்து குறைந்தது 2 வருடங்கள் இருக்கும். இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பாக எந்த காட்சிகளெல்லாம் மனதில் இன்னும் பதிந்திருக்கிறது என்று பார்த்தேன். வியப்பாக இருந்தது. மொத்த படமும் என் மனதில் இவ்வாறு படிந்திருந்தது. Will ஒரு genius. Genius என்பதை விட அகந்தையும், ஆணவமும் கொண்டவன். மகாபாரத்தில் கர்ணன் எவ்வாறு விஜயனை வெல்லவேண்டும் என்ற உந்துதல் அவனது உந்து சக்தியாக அமைந்ததோ அவ்வாறு Willலிற்கு அஹங்காரம்  அமைந்தது. எப்பொழுதெல்லாம் இவனது மனம் உடைந்தது தெரிகின்றதோ அப்பொழுதெல்லாம் புத்தியை கொண்டு அதற்கு மருந்திடுவான். இந்த வேலையில் Lambue இவனுடைய திறமையை மட்டும் கண்டு இவனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும்போது, முரண்டுபிடித்து நழுவிகிறான். அதற்காக தனது நண்பனான Seanனிடம் கூட்டிச்செல்கிறான். Mentioning of நம்ப ஊர்காரர் ராமானுஜன். முதல் சந்திப்பில் Will, Seanனை தாக்குவது, அடுத்த சந்திப்பில் பதிலுக்கு பதில். Lambue-Sean conflict. Last letter from Will to Sean. இப்படிதான் படம் நினைவில் இருக்கின்றது. Will உடைய Girlfriend கூட இருப்பாள் என்று மட்டும் நினைவில் இருந்தது. ஆனால் எப்படி Sean, Willஇடம் பேசினான் என்பதை முழுவதுமாக  மறந்திருந்தேன். அந்த உரையாடலை படம் பார்க்கையில் ரசித்தேன் என்று நினைவிருகின்றது ஆனால் முழுவதையும் மறந்திருந்தேன். ஏன் மறந்தேன் என்று மற்றொரு முறை பார்க்கும்போதுதான் தெரிந்தது. காரணம் இந்த உரையாடல்கள்தான் படத்தின் அழகே.

இந்த விமர்சனத்தை எழுத மீண்டும் படத்தை பார்த்தேன். ‘Sorry, guys. I gotta see about a girl’ என்பதுதான் படத்தின் மொத்த கதை. இந்த படத்தை பற்றி பல விமர்சனங்கள் எழுதாகிவிட்டது. சிலவற்றை படித்துவிட்டு வியந்தும் போனேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து விமர்சனங்களையும் படித்தேன். பல குறைகள் இருப்பினும் அவை இரண்டாம் பச்சதிற்கு தள்ளி இருக்கிறேன். உதரணமாக Willலின் கதாபாத்திரம் மிகவும் மேலோட்டமாக வடிவமைக்க பட்டுள்ளது. அவன் ஒன்றும் Ramanujan இல்லை, எந்திரன் படத்தில் வரும் Chitti போல் இருக்கிறான். ஆகையால் அவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, அனைத்திலும் விடுபட்டது என்று நான் கருதுவதை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

முதலாக Will-Sean இடையான உறவு குரு-சீடன் இடையே அமைந்த உறவு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். குருவை நாம் அறியும் முன்புவரை அவர் நமக்கு தேவைப்படவே மாட்டார். Willலிற்கு Seanஉடைய தேவையென்ன? ஒன்றுமில்லை. இன்னும் 50-60 ஆண்டுகள் இருந்தால் இறந்துவிடுவான். ஆனால் குருவை ஒருவன் கண்ட பிறகுதான் அவர் இல்லாத வெறுமையை நாம் கண்டுகொள்வோம். குரு அணைத்து சீடர்களிடமும் ஒரே போல நடந்துகொள்ள மாட்டார். ஒரே குருவின் சீடர்கள் என்றபோதிலும் அவரவர் குரு தனித்தனிதான். சீடன் குருவை உருவாக்கிக்கொள்கிறான், அதற்கு குரு அனுமதிக்கிறார் என்பதே உண்மை.

அடுத்து Will-Lambeau இடையான உறவு வெறும் மாணவன்-ஆசிரியன் இடையே அமைந்த உறவு. ஆசிரியன் நமக்கு எப்போதும் தேவைபடுகிறார். உதாரனமாக மருத்துவராக வேண்டுமென்றால் கட்டயமாக ஒரு ஆசிரியன் தேவை. ஆனால் அவர் அதனால்மட்டும் குருவாக முடியாது ஏனென்றால் அவர் இதற்குத்தான் என்பது முன்பே முடிவாகிவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆசிரியனின் இடமும் குறைவு மாணவனின் இடமும் குறைவு, பாடத்தின் இடம்தான் பெரியது.

Further Readings: https://philosophynow.org/issues/112/Good_Will_Hunting

http://www.hollywoodreporter.com/review/good-will-hunting-1997-review-952640

http://www.telegraph.co.uk/culture/film/filmreviews/11035949/Good-Will-Hunting-review-Robin-Williams-brings-off-sharpness-and-tenderness.html

http://www.rogerebert.com/reviews/good-will-hunting-1997

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s