Amadeus (1984)

Directed by: Miloš Forman
Produced by: Saul Zaentz
Screenplay by: Peter Shaffer
Based on Amadeus by Peter Shaffer
Starring: F. Murray Abraham; Tom Hulce; Elizabeth Berridge; Simon Callow; Roy Dotrice; Christine Ebersole; Jeffrey Jones; Charles Kay
Cinematography: Miroslav Ondříček
Edited by: Nena Danevic; Michael Chandler
Running time: 161 minutes
Language: English
Genre: Period Drama

Seeran Review: Mozart கதாநாயகனா அல்லது Salieri கதாநாயகனா என்பதுதான் matter. என்னை பொருத்தமட்டில் Salieri தான் கதாநாயகனாக இருக்கவேண்டும். அப்படி இருப்பதுதான் நல்லது! கதை நகர மாற்றம் அவசியம். கடவுள் மாறாதவர். இசை கடவுளான Mozart என்ன பெரிதாக மாற்றத்தை அனுமதிப்பார். பகவான் கிருஷ்ணர், Alexis Zorba என்ன மாற்றத்தை அனுமதிதார்களோ, அதே அளவுதான்.

‘Until he came’

Prerequisites: See the entire film at once with sound.

தல்ஸ்தோயின் கலைநோக்கு

Two Old Men by Tolstoy

நேரடியான படம் என்பதால் அதிகப்படியான விமர்சனம் அவசியமற்றது. படம் பார்க்கும் அனைவருக்கும் படத்திலுள்ள முக்கியமான காட்சிகள் இயல்பாக தெரிவதால், தவறவிடும் வாய்ப்புள்ள இடங்களை மட்டும் விரித்துள்ளேன்.

படம் தொடங்குகிறது – ‘Signore Salieri, open the door, be good now!Signore”, we have something special for you. Something you’re going to love’ என்று சொல்லிவிட்டு தனது எஜமானனுக்கு கொண்டுவந்த உணவை ருசிப்பான். இந்த காட்சி எனது தாத்தாவையும் அவரது இறுதி நாட்களையும் நினைவூட்டியது. எனது தாத்தா O.N.Periyasamy 1920s இறுதியில் பிறந்தவர். சின்ன தாராபுரத்திற்கு அருகிலுள்ள ஊத்துப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து, 9 வயதில் சுய விருப்பத்தால் படிப்பை தொடங்கினார்(அது வரை ஆடு மேய்துகொண்டிருந்தார். மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து மேலே வந்தார். சின்ன தாத்தா O.N.Muthusamy அவர்களுக்கு முன்பே மணமாகிவிட்டது. என்னுடைய சின்ன ஆத்தாவின் நகையை வைத்து என்னுடைய தாத்தா படித்திருக்கிறார். 1960-1990 வரை கரூரில் இருந்த 3 பெரும் வக்கீல்களில் ஒருவர். என்னுடைய அப்பா தன்னை ONP son என்றுதான் எப்போதும் அறிமுகப்படுதிகொள்வார். அத்தை ONP daughter, ஆத்தா ONP சம்சாரம். என்னை யார் பார்த்தாலும் தாத்தாவை மிந்தவேண்டும் என்பர். மனவீட்டில் உருவாகும் வட்டநாற்காலி பேச்சுகளில் எப்போதும் நடுவில் இருப்பார். Multiple-organ disorder காரணமாக 2008 ஆம் ஆண்டில் உடல் நலம் மிகவும் குன்றி, 2009 ஆம் ஆண்டு வாக்கில் காலமானார். அவரது இறுதிகாலம் எனது மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கியது. 2003 ஆம் ஆண்டுவரை அவரை கண்டு அஞ்சியவர்களெல்லாம் சற்று பிடியை தளர்த்தினர். இதன் உச்சகட்டம் மருத்துவமனையில் ஒரு செவிலி தாத்தா தாத்தா என்று கன்னத்தை கில்லி கிண்டலடித்தது. காலம் அனைத்தையும் மாற்றவல்லது என்பது கண்முன்பாக இருந்தது. தனது முதலாளி வயோதிகம் அடைந்ததும் வேலையாட்களுக்கு ஒரு படி அதிக உரிமை வருவதை Tolstoyயின் War and Peace மிகவும் அழகாக விளக்கும். கட்டுபாடில்லாத நிலையில் இது அத்துமீறலாகவும் உருவெடுக்கும்.

‘I speak for all mediocrities in the world. I am their champion. I am their patron saint. Mediocrities everywhere. I absolve you. I absolve you. I absolve you. I absolve you. I absolve you all.’ என்ற வசனத்தை கேட்டவுடன் மனம் ஏதோ பட படக்கின்றது. சபரிநாதனின் கவிதை ஒன்றுள்ளது

மின்மினியே

யார் தொட்டு எழுப்பியது உனை

எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது

எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்

கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்

எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்

எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்

எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்

எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்

பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்

இந்த கவிதைக்கு சூரியன் என்று தலைப்பிட்டும் வாசித்துப்பாருங்கள். அத்தனை பெரும் சக்தி எத்தனை கால தவம். அந்த தவத்தின் முடிவு அனைத்தையும் விழுங்கும். எதன் பொருட்டு இந்த உலகம் வளம்பெற்றதோ அதுவே இந்த பூமி அழியவும் காரணமாக அமைந்தது. பல கோடி ஆண்டுகள் தான் வளர்த்த பூமி அழிவதை கண்ட அதன் கண்கள். கடவுளே சூரியனுக்கு உயிர் இருந்துவிடக்கூடாது. Mozart சூரியன். Salieri பூமி. சூரியன் நம்மை விழுங்கும்தோறும் அது தந்த வசந்தகாலம் எங்கே செல்லும்.

Here again was the very voice of God. I was staring through the cage of those meticulous ink strokes at an absolute beauty. Is it not good? It is miraculous. Yes, he’s very proud of his work. So you will help us? I dine with the emperor tomorrow evening. One word from me and the post is his. Thank you, Your Excellency! Thank you! Come back tonight. – Tonight? – Alone. What for? Some service deserves service in return. No? – What do you mean? – Isn’t it obvious? It’s a post all Vienna seeks. If you wish it for your husband, come tonight. I’m a married woman, sir. Then don’t. It’s up to you. And not to be vague, that is the price.’ – இந்த படத்தின் உச்சகட்டம் என்றால் நான் இதைதான் சொல்வேன். நீங்கள் யானையை வேண்டுமானால் வளர்க்கலாம் ஆனால் எறும்பை வளர்க்க முடியாது. இசையை யாரும் உருவாக்க முடியாது. இசையை அனுமதிக்கும் வழியாக மட்டுமே நம்மால் இருக்க முடியும். இசையை உடமை என Salieri எண்ணுகிறான் என்பதற்கு இதைக்காட்டிலும் ஒரு காட்சி அமைகப்படிருக்க முடியாது.

கலைஞர்கள் கடவுளிடம் மட்டுமே பேச தெரிந்தவர்கள்.

Further Readings: https://www.livescience.com/32879-what-happens-to-earth-when-sun-dies.html

http://www.rogerebert.com/reviews/great-movie-amadeus-1984

https://www.theguardian.com/film/2011/dec/20/my-favourite-film-amadeus

http://www.nytimes.com/movie/review?res=9901E1DE173BF93AA2575AC0A962948260

http://www.empireonline.com/movies/amadeus/review/

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s