The Wind Will Carry Us (1999)

Directed by: Abbas Kiarostami
Produced by: Abbas Kiarostami
Written by: Abbas Kiarostami
Starring: Behzad Dorani
Cinematography: Mahmoud Kalari
Running time: 118 min
Language: Persian

Seeran Review: Persona (1966), Holy Motors (2012) போன்ற படங்களை புரிந்துகொள்ள – இது அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ, என்ற பாணியில் மண்டையை கசக்கி புரிந்து கொள்ளவேண்டிய படங்கள். இன்று படம் பார்த்தால் ஒரு கோணம் தோன்றும். அதையே சிந்தித்து கொண்டே இருக்கையில் நாளை மற்றொன்று தோன்றும். சரி என படத்தை ஒரு 10 வருடம் கழித்து பார்த்தால் மற்றொன்று தோன்றும். பழகி பழகி அணைத்து வித தோன்றளையும் ஒரே அமர்வில் கண்டுவிடவேண்டும் என்ற முனைப்பு படைப்பை தலை அழவில் மட்டும் வைத்து அழகு பார்க்கும். ஆனால் மனதிற்கு கொண்டு வர இயலாது. மீறி கொண்டு செல்ல முயற்சித்தாலும் நவீன கவிதை மனதில் எந்த இடத்தில் கட்டில் அமைதிருக்குமோ அங்கு சென்று படுத்துவிடும். கும்பகர்ணனை தட்டி எழுப்பவேண்டியதுதான். பலம் பொருந்தியவன்தான், ஆனால் எப்போதுதான் எழுவான்(நினைவில் வரும்). எழுத்தால் இடத்தையே(மனதையே) ஆக்கரமிப்பான். பின்பு தூங்கிவிடுவான். விழித்திருகையில் செய்த செயல் நமக்கு நிச்சயம் உதவும் என்பதில் மாற்று கருத்தில்லை. எனினும் அவன் இப்போது தூங்குகிறானே! உயிருடன்தான் இருக்கிறான் ஆனாலும் தூங்குகிறான். எப்போது விழிப்பான் என்று காத்திருக்க வேண்டும்.

இந்த படத்தை பார்த்தவுடன் ஒன்றும் புரிந்துவிடவில்லை. இரண்டு முறை முழுவதும் பார்த்தேன். அப்போதும் புரியவில்லை. புரியவில்லை என்றால், கதை(Plot) புரிந்தது. Behzad ஒரு கிராமத்திற்கு வருகின்றான். எந்த காரணதிற்காக என்று தெரியவில்லை. அலைபேசியில் அழைப்பு வரும்போது மலைக்கு மேழே சென்றுவிடுகிறான். பேசுகிறான். Mrs. Malek எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக்கொண்டே இருக்கின்றான். நடுநடுவே புகைப்படங்கள் எடுத்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொல்கிறான். பாட்டி விண்வெளி சென்றவுடன் வந்து தாராளமாக புகைப்படம் எடுக்கிறான். http://www.filmsufi.com/2010/01/wind-will-carry-us-by-abbas-kiarostami.html என்ற இணையதளத்தில் படத்தை பற்றி படித்துவிட்டு மீண்டும் படத்தை பார்த்தேன். படத்தின் கோணம் ஒரு வகையில் மாறினாலும், இந்த படத்தை பொறுத்தவரையில் analysis தேவையில்லை என நினைக்கிறேன். ஓவியர் சந்துருவின் ஒரு வாசகம் நினைவிற்கு வந்தது – ‘மனதுக்கு எவ்வளவு பிடித்தாலும் ஒரு மனிதனின் கலைப் படைப்பை நாம் ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி விமர்சித்துவிட முடியும். ஆனால், பாறையை பிளந்துகொண்டு முளைக்கும் ஒரு செடியை நீங்கள் எந்த விமர்சனமும் இன்றிப் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்’. இந்த படம் அந்த பூவை போன்றது.

அவரவர் பார்த்து வாழவேண்டிய படம். எப்படி பார்க்க கூடாது என்று மட்டும் இங்கே சொல்லுகிறேன்.

1.    Behzad உடைய கதாபாத்திரத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். Kamal Hassan IIT-Bombay Avenues’ 2010 இல் சொல்லுவார், ‘I think the characters though people believe that I live in them, I don’t I rent them the space. I walk, live happily there but not ever after, I walk out’. சினிமாவின் dimension 2D என்பதால் இன்னும் சிரமப்பட்டு சென்று அந்த கதாபாத்திரத்தின் ஊடாக சென்றமற முயலவேண்டும்.

2.    காட்சிகள் மிகவும் மெதுவாக மாறும் என்பதால் bore அடிக்கும். அதனால் படத்தை தாராளமாக பிரித்து பிரித்து பாருங்கள் ஆனால் முழு படத்தையும் ஒரே நாளில் பார்த்துமுடியுங்கள். அதற்கு பாதியாக பிரிக்காதீர்கள். முதல் நாள், அதாவது Behzad பச்சை கட்டம்போட்ட சட்டை போட்டிருக்கும் வரையில் முதல் நாள். இதனுடன் நிறுத்திவிடுங்கள். அடுத்தது ஆமை scene முடிந்தவுடன் நிறுத்திவிடுங்கள். மிச்சம் இருக்கும் படத்தை நிறுத்தாமல் பாருங்கள்.

3.    அடுத்ததாக இந்த படத்திலிருந்து என்ன கற்றுகொண்டோம் என தயவுசெய்து வினவாதீர்கள். இது ஏன் இப்படி என்று தயவு செய்து கேட்காதீர்கள். உதாரணமாக ditch digger Youssef, படம் முடியும் வரை அவனது முகத்தை காட்டமாட்டார்கள். ஏன் காட்டவில்லை என்று சிந்திக்காதீர்கள். அவனது முகம் தெரியவில்லை அவளவுதான். இதே போன்றுதான் Miss Zeynabயை காட்டாமல் இருப்பதும். இன்னும் சொல்லபோனால் படம் முடியும்வரை சிந்திப்பதை குறைத்துகொள்ளுங்கள்.

4.    இந்த படத்தின் கடைசி காட்சியில் Behzad அவச அவசரமாக புகைப்படம் எடுத்துவிட்டு,இறுதி சடங்கிற்கு செல்லும் பெண்களுக்கு  கையை ஆட்டி சிரித்து அந்த கிராமத்தை விட்டு வெளியேருவான். இந்த படத்தை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கும் அவ்வாறு கை ஆட்ட தோன்றவேண்டும் அல்லது ஒரு புன்முறுவல்யேனும் வரவேண்டும். அந்த புன்முறுவல் வரும்வேளையில் உங்கள் மனதில் மொத்த படத்தையும் grinder ஒன்றை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, அதை குடித்து வரும் ஏப்பதுடன் இந்த சிரிப்பும் ஒன்றாக வரவேண்டும்.

Further Readings: http://www.asharperfocus.com/Wind.html

http://unspokencinema.blogspot.in/2009/09/wind-will-carry-us.html

 

பின்னூட்டமொன்றை இடுக